இஸ்ரேல் நீண்ட நாள் நீடிக்காது : கையில் துப்பாக்கியுடன் கமெனி ஆவேச உரை

11

பெய்ரூட்: இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் ஒரு போதும் பின்வாங்காது என கையில் துப்பாக்கியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமெனி ஆவேச உரையாற்றினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேகடந்தாண்டு அக். 07-ம் தேதி துவங்கிய போர், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறி தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டையாக துவங்கியுள்ளது. இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழலில் இன்று (அக்.,04) வெள்ளிக்கிழமை பொது சொற்பொழிவு நிகழ்ச்சியையொட்டி ஈரான் தலைநகர் டெஹரானில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் மத்தியில் தலைமை மதகுரு அயதுல்லா கமெனி பேசினார். அரபு மொழியிலும், பின்னர் பார்சி மொழியிலும் பேசினார். அப்போது கையில் ரஷ்ய தயாரிப்பு துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் பேசியது,

இஸ்ரேல் ஆணவத்திற்கு ஈரான் ஒரு போதும் அடிபணியாது. நம் ராணுவம் மன உறுதியுடன் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ளும், நம் ராணுவத்தின் நடவடிக்கை சட்டபூர்வமானது. பின் வாங்க மாட்டோம். இஸ்ரேல் நீண்ட நாள் நீடிக்காது,இஸ்ரேலுக்கு எதிரக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும். வரும் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதல் 'சட்டபூர்வமானதாக' இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

வரும் 07-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் துவங்கி ஓராண்டையொட்டி இன்று கமெனி பேசியதன் மூலம் வரும் 07-ம் தேதி இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போவதாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Advertisement