100 நாட்களில் எங்க தலைவர் சாதிச்சது இது தான்?

10

புதுடில்லி: ‛‛ மத்திய அரசுக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக பார்லிமென்ட்டில் முழங்கினார் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற காங்., எம்.பி.,ராகுலின் 100 நாள் சாதனைகளை பட்டியலிட்டது காங்.,

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேிய கட்சியான காங்கிரஸ் 90 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்கு பின் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. லோக்சபா எதிர்கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேறார்.

இந்நிலையில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, 100 நாட்கள் நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் அடங்கிய சிறப்பு கையேடுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த செப்டம்பரில் வெளியிட்டார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங். எம்.பி.,ராகுல் பொறுப்பேற்று 100 வது நாளையொட்டி காங்., தலைவர் பவன் கேரியா ராகுலின் 100 நாள் சாதனையை பட்டியலிட்டு தனது ‛ எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியது,

கடந்த ஜூலையில் நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், நுழைவுத்தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசின் பொறுப்பற்ற செயலை கண்டித்தார். அக்னிவீர் திட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு குறித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கடந்த ஜூலை மாதம் மூன்றாவது முறையாக மணிப்பூர் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பார்லிமென்டில் குரல் கொடுத்தார்.


மத்திய அரசு துறைகளில் உயர் பதவியில் 45 காலி இடங்களுக்கு நேரடி நியமன முறையில் தேர்வு செய்ய மத்திய அரசு அமைப்பான யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக கண்டன குரல் கொடுத்தார்.
இப்படி எதிர்கட்சி தலைவராக ராகுல், 100 நாட்களில் குரலற்றவர்களின் குரலாக விளங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement