காது தொற்றா... கவனம் !

இது காது பகுதியில் தொற்று இருப்பதற்கான அறிகுறி. காதிலிருந்து சீல் வெளியேறுதல், துர்நாற்றம் வீசுதல், காதின் பக்கம் தலையை சாய்த்து கொள்ளுதல், உணவு உட்கொள்ளாமை போன்றவை காது தொற்றுக்கான அறிகுறிகள்.

பப்பிகளின் காது அமைப்பு இயற்கையாகவே தொற்று ஏற்படுத்தும் வகையில் தான் அமைந்திருக்கும். இதிலும் டச்ஷண்ட், பீகல், லசாப்சோ, சிட்ஜு, ரெட்ரீவர் இன பப்பிகளுக்கு காது தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

முறையாக பப்பியை பராமரிக்காமல் இருந்தாலும், தொற்று ஏற்படலாம்.குளிக்க வைக்கும் முன்பு, பப்பியின் காதில், தண்ணீர் புகாமல் இருக்க,பஞ்சு வைக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைப்படி, காது சுத்தம் செய்யும் திரவம் கொண்டு, தினசரி அப்பகுதியை சுத்தம் செய்தல் அவசியம்.

இதையும் தாண்டி தொற்று ஏற்பட்டால்,காதின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். கால்நடை மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சைக்கு உட்படுத்தும் பட்சத்தில், தொற்றின் தீவிரத்தை குறைக்கலாம். இது தீவிரமாக இருக்கும்பட்சத்தில், அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

ஒருமுறை தொற்றுக்கு ஆளான பப்பியின் பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். காது தொற்று விஷயத்தில் அலட்சியம் காட்டினால், காது கேளாமை, நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

- -சு.பா. விக்னேஷ்வரன்,

கால்நடை உதவி மருத்துவர், திருவண்ணாமலை.

Advertisement