அம்மாபேட்டை அருகே மேலும் 2 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு

பவானி : ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சியில், 'ஸ்பேக்' குச்சிக்கிழங்கு மில் உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதில் ஐந்து பேர் காய்ச்சலால் பாதித்தனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பிபின் குமார், 19; பரனித்தர், 19; ஆகியோருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அன்மோல், 19; என்பவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற இருவருக்கு சாதாரண காய்ச்சல் என தெரிந்தது. பவானி அரசு மருத்துவமனையில் ஐந்து பேரும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பவானியை அடுத்த பருவாச்சி காட்டூரில், 13 வயது சிறுவன் எலி காய்ச்சலால் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். ஒரு பெண் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மேலும் இருவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட குச்சிக்கிழங்கு மில்லில், குருவரெட்டியூர் வட்டார மருத்துவ அலுவலர் அன்புமணி தலைமையிலான குழுவினர் முகாமிட்டு, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், மில்லில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement