ஹிமாச்சலில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியின் 3 தளத்தை இடிக்க உத்தரவு


சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதி 3 தளங்களை இடித்து தள்ள சிம்லா மாநகராட்சி ஆணையருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லாவின் சஞ்சவ்லி பகுதியில் உள்ள மசூதி, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அதை இடிக்கக் கோரியும், ஹிந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மசூதியை இடிக்க மாநகராட்சி ஆணையர் மசூதி நிர்வாக கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதில் அளிக்காமல் 5 மாடிகொண்ட கட்டடம் கட்டியது. இதற்கு மாநகராட்சி அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் இல்லை. இந்நிலையில் கடந்த 11ம் தேதி மசூதியை இடிக்க கோரி நடந்த போராட்டத்தை போலீசார் தடுக்க முயன்றபோது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து சிம்லா கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சட்டவிரோதமாக கட்டியுள்ள மூன்று தளங்களை 2 மாத காலத்திற்கு அவகாசம் அளித்து இடித்து தள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மசூதி நிர்வாக கமிட்டிக்கு உத்தரவிட்டது. வழக்கை டிசம்.21-ம் தேதி ஒத்தி வைத்தது.

Advertisement