ராணுவ ட்ரோன்களில் அமெரிக்கா முதலிடம்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

3


புதுடில்லி : ராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது.


அமெரிக்க ராணுவம், சமீப காலமாக பயங்கரவாதிகள் மீது நடத்தும் தாக்குதல் அனைத்தும் ட்ரோன் எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலமாகவே நடத்துகிறது. போர்க்களத்தில் தவிர்க்க முடியாத கருவியாகவே ட்ரோன்கள் மாறி விட்டன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அவற்றை உருவாக்குவதில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன.


எதிரிகளை கண்காணித்தல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் சிக்னல்களை தடுக்க இவை பெரிதும் உதவுகின்றன. இந்நிலையில், பவர் அட்லஸ் மற்றும் தி ட்ரோன் டேட்டாபுக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அதிக ராணுவ ட்ரோன்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

அதன்படி,

அமெரிக்கா - 13,000

துருக்கி - 1,421

போலந்து-1,209

ரஷ்யா - 1,050

ஜெர்மனி- 670

இந்தியா - 625

பிரான்ஸ் - 591

ஆஸ்திரேலியா - 557

தென் கொரியா - 518

பின்லாந்து- 412 ட்ரோன்களை வைத்துள்ளன.

இந்தியாவிடம் உள்ள 625 ராணுவ ட்ரோன்களில் 600 ஸ்டைலைட் மாடலை சேர்ந்தவை. இந்தியாவிடம் உள்ள பெரும்பாலான ட்ரோன்கள், இஸ்ரேலிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement