ஆசிய ரக்பி: இந்தியா 'வெள்ளி'

காத்மாண்டு: ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் டிராபி தொடர் நடந்தது. பெண்களுக்கான லீக் சுற்றில் இலங்கை (29-10), இந்தோனேஷியா (17-10), ஈரானை (20-0) வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதியில் 24-7 என குவாம் அணியை வென்றது. பைனலில் இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ஷிகா யாதவ் தலைமையிலான இந்திய அணி 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.


இதுகுறித்து ஷிகா கூறுகையில், ''வெள்ளிப்பதக்கம் வென்றது சிறப்பு. இருப்பினும் அடுத்த முறை தங்கம் வெல்ல முயற்சிப்போம். பதக்கம் வெல்ல உதவிய தலைமை பயிற்சியாளர், உதவியாளர்களுக்கு நன்றி,'' என்றார்.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் குவாம், இந்தோனேஷியா அணிகள் மோதின. இதில் குவாம் அணி 22-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றது.
ஆண்களுக்கான பைனலில் பிலிப்பைன்ஸ் அணி 27-14 என சீனதைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இலங்கை அணி 32-0 என உஸ்பெகிஸ்தானை வென்று வெண்கலம் கைப்பற்றியது.

Advertisement