ஆனந்த் அணி வெற்றி: குளோபல் செஸ் லீக் போட்டியில்

லண்டன்: குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த் தலைமையிலான கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி, 'நடப்பு சாம்பியன்' திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் ஆனந்த் (கங்காஸ்), அலிரேசா (திரிவேணி கிங்ஸ்) மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 47வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.
அடுத்த போட்டியில் அர்ஜுன் எரிகைசி (கங்காஸ்), யி வெய் (திரிவேணி கிங்ஸ்) மோதினர். இப்போட்டி 60வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் கங்காஸ் அணியின் வைஷாலி தோல்வியை தழுவினார். மற்ற போட்டிகளில் கங்காஸ் அணியின் பர்ஹாம் மக்சூட்லுா, நுார்கியுல் சலிமோவா வெற்றி பெற்றனர். முர்சின் (கங்காஸ்), ஜாவோகிர் சின்டரோவ் (திரிவேணி கிங்ஸ்) மோதிய போட்டி 'டிரா' ஆனது.


முடிவில் கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி 10-8 என்ற கணக்கில் இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது. கங்காஸ் அணி 3 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. அலாஸ்கன் நைட்ஸ் அணி (12 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement