கோகோ காப் 'சாம்பியன்': சீன ஓபனில் அசத்தல்

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பீஜிங்கில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய கோகோ காப், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 8வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு பட்டமானது. இதன்மூலம் சீன ஓபனில் செரினா வில்லியம்சிற்கு (2004, 2013) பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்க வீராங்கனையானார்.

Advertisement