'ஏர்ஷோ' மக்கள் கருத்து

துாரத்தில் இருந்து பார்க்க முடிந்தது

இரண்டு கிலோ மீட்டர் துாரம் வரை நடந்து சென்று, மெரினா கடற்கரையை சென்றடைந்தோம். ஆனால், கடற்கரைக்குள் எங்களால் போக முடியவில்லை; தடுத்து விட்டனர். இதனால், சென்னை பல்கலையில் இருந்து தான், நம் நாட்டின் விமானப் படைவீர்கள் விண்ணில் நிகழ்த்திய சாகசத்தை காண முடிந்தது. அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்பது சிறிய வருத்தமே.

- சந்திரலேகா, இல்லத்தரசி. பூந்தமல்லி.

போக்குவரத்து ஏற்பாடு சரியில்லை

கூட்ட நெரிசலில் மெட்ரோ ரயில் நிலையம் ஸ்தம்பித்து விட்டது. மெட்ரோ ரயில் நிலையத்தில், கூட்டத்தில் சிக்கி சிலர் மயங்கி விழுந்து விட்டனர். குழந்தைகள், முதியோர் பெரும்பாடுபட்டனர். பல லட்சம் பேர் பயணம் செய்தால் எப்படி கையாள வேண்டும் என்பதை, விமான சாகச நிகழ்ச்சியில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாடம் கற்க வேண்டும்.

- ராகுல், தனியார் ஊழியர், திருவொற்றியூர்.

மெய்சிலிர்க்க வைத்த சாகசம்

விமான சாகச நிகழ்ச்சி குறித்து, இன்ஸ்டாகிராம் மீம்ஸ்களை பார்த்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அது வீண் போகவில்லை. கடல் போல மக்கள் கூட்டம். வானில் விதவிதமான விமான படையினரின் சாகசம் மெய் சிலிர்க்க வைத்தது. நம் நாட்டு தேசியக் கொடி போன்ற பாராசூட்டில் வீரர்கள் பறந்து வந்தது மிகவும் அற்புதமான காட்சி. சாகச நிகழ்ச்சி துாள். ஆனால், மெரினாவில் இருந்து, சென்ட்ரல் மெட்ரோ வரை பஸ் போக்குவரத்து இல்லாமல் நடந்ததே வந்தது தான் கொடுமை.

- கீர்த்தனா, இன்ஜினியரிங் மாணவி வண்ணாரப்பேட்டை.

Advertisement