பழநியில் முதலுதவி,தகவல் மையம்

பழநி: பழநி அடிவாரம் கிரி விதி பகுதிகளில் நீதிமன்ற உத்தரவின் படி பல்வேறு ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதில் பாதவிநாயகர் கோயில் அருகே பழநி முருகன் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட இடத்தில் பக்தர்கள் நலனுக்காக தாய்மார்கள் பாலுாட்டும் அறை, தகவல் மையம், கோயில் முதலுதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டது. நேற்று கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து துவங்கி வைத்தார். ராம்ராஜ் காட்டன் நிர்வாகி நாகராஜ், வழக்கறிஞர் பரணிதரன், முன்னாள் கோயில் அறங்காவலர் சுப்பிரமணியம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். செல்வ சுப்பிரமணியம் குழுக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

Advertisement