சின்ன வெங்காயம் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.65க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி, சாலைப்புதுார், கொல்லபட்டி, காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை சுற்றிய கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடை வெங்காயம் பயிரிட்டனர். அவற்றை அறுவடை செய்யும் சமயத்தில் விலை குறைவாக இருந்ததால் பறித்த வெங்காயத்தை விவசாயிகள் மூங்கில் பட்டறைகளில் வைத்து சேமித்தனர். இந்நிலையில் அறுவடை சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து வருகிறது. இதனால் விலை ஏறுமுகமாக காணப்படுகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக கிலோ நேற்று ரூ.65 க்கு விற்றது. இதனால் சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,தீபாவளி வரவுள்ள நிலையில் வரத்து குறைந்து சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் விலை ஏறுமுகமாக உள்ளது என்றார்

Advertisement