தனியார் பஸ் மீது டூ - வீலர் மோதி பஸ் எரிந்து சேதம்

தேனி : தேனி மாவட்டம், கம்பம் பைபாஸ் ரோடு போடேந்திரம் விலக்கு அருகே ரோட்டை கடந்து சென்ற டூ - வீலர் மீது தனியார் பஸ் மோதியது. இதில் டூ - வீலரின் பெட்ரோல் டேங்க்கில் பற்றிய தீ, பஸ்சிற்கும் பரவி, பஸ் எலும்புகூடானது. டூ - வீலரில் சென்ற டி.வி., மெக்கானிக், பஸ் கீழ் பகுதியில் சிக்கி உடல் கருகி பலியானார்.


தேனி எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்தவர் அரசாங்கம், 57. இவருக்கு கூழையனுார் அருகே உள்ள அய்யநாதபுரத்தில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை டூ - வீலரில் தோட்டத்திற்கு சென்று விட்டு தேனி திரும்பினார். தேனியிலிருந்து கம்பம் சென்ற தனியார் பஸ்சை போடேந்திரபுரம் டிரைவர் விக்னேஷ், 32, என்பவர் ஓட்டினார். போடேந்திரபுரம் விலக்கில் சென்ற பஸ் டூ - வீலரில் மோதியது.

இதில், அரசாங்கம் டூ - வீலருடன் பஸ் முன் சக்கர பகுதியில் சிக்கினார்.



பஸ் சிறிது வினாடிகள் சென்று நிறுத்தப்பட்டது. இழுத்து செல்லப்பட்டதில் டூ - வீலரில் தீப்பற்றியது.


இந்த தீ, பஸ் முன்பகுதியில் பற்றியது. பஸ்சில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கி ஓடினர். மெக்கானிக் உடலை மீட்பதற்குள் பஸ் முழுதும் தீப்பற்றி எரிந்தது.


பஸ் டீசல் டேங்க் பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.


பஸ் முழுதும் எரிந்து முடிந்த பின் கருகிய நிலையில் மீட்கப்பட்டார்.பழனிசெட்டிபட்டி
போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement