தீபாவளி பண்டிகைக்கு2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி

முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: ''புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் ரேஷன் கடைகளை திறந்து, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது;

புதுச்சேரி மக்கள் அனைவரும் எதிர்பார்க்க கூடிய ரேஷன் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன், அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்.

பிறகு மீத சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். முதற் கட்டமாக 1.45 கோடி ரூபாய் ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைக்கான வாடகை இடங்கள், சேதமடைந்த மேசை, நாற்காலிகள் சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரும் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது சம்பந்தமாக பிரதமர் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

விஜய்க்கு வாழ்த்து

'நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கும், அவரது கட்சி மாநாட்டிற்கும், அவர் மேலும் மேலும் உயர்வதற்கும் எனது வாழ்த்துக்கள். மாநாட்டிற்கு எனக்கு அழைப்புவரவில்லை. வந்தால் அது குறித்து பேசலாம்' என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

Advertisement