குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பனியம்பள்ளி பஞ்., மக்கள் மனு

ஈரோடு: சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி பஞ்., கொமரபாளையம் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:


எங்களது பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிப்காட்டுக்கு மிக அருகில் உள்ளதால், சிப்காட் ஆலை கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதித்துள்ளது. கால்நடைகள் குடிப்பதற்கு கூட உகந்ததாக இல்லை. முழு அளவில் காவிரி குடிநீரை நம்பி-யுள்ளோம். ஆனால், சரிவர, முழுமையாக கிடைப்பதில்லை. பஞ்சாயத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கும் குடிநீர் தொட்டியை, எங்கள் பகுதியில் இருந்து, ௨ கி.மீ., துாரத்தில் அமைக்க முயற்சிக்கின்-றனர். அவ்வாறு அமைத்தால் மீண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலையே ஏற்படும். அத்தொட்டியை எங்கள் பகு-தியில் அமைத்து, விரைவாக குடிநீர் வழங்க வேண்டும். இவ்-வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement