இந்திய அணி பயணம் எப்போது * ஆஸி., டெஸ்ட் தொடருக்கு...

புதுடில்லி: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு, இரு வாரம் முன்னதாக செல்லும் இந்திய அணியினர், தங்களுக்குள் இரு பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22-26ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.
இதற்குத் தயாராகும் வகையில் சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் (3) தொடர் (அக். 16-நவ. 5) முடிந்த சில நாளில் இந்திய அணி, ஆஸ்திரேலியா செல்லும். இந்தியா, இந்தியா 'ஏ' என நமது வீரர்கள் இடையிலான, ஒன்று அல்லது இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும்.
இதற்கான இந்திய 'ஏ' அணித் தேர்வு முதல் சுற்று ரஞ்சி கோப்பை (அக். 11-14) போட்டி முடிந்த பின் தேர்வு செய்யப்படும். அதேநேரம் மற்றொரு அணி தென் ஆப்ரிக்கா சென்று, நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் மோத உள்ளது. வங்கதேச தொடரில் பங்கேற்கும் அணியினர், தென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் சேர்க்கப்படலாம்.

டெஸ்ட் அட்டவணை
தேதி போட்டி இடம்

நவ. 22-26 முதல் டெஸ்ட் பெர்த்
டிச. 6-10 2வது டெஸ்ட் அடிலெய்டு
டிச. 14-18 3வது டெஸ்ட் பிரிஸ்பேன்
டிச. 26-30 4வது டெஸ்ட் மெல்போர்ன்
ஜன. 3-7 5வது டெஸ்ட் சிட்னி
(2025)

தென் ஆப்ரிக்க 'டி-20' அட்டவணை
தேதி போட்டி இடம்

நவ. 8 முதல் 'டி-20' டர்பன்
நவ. 10 2வது 'டி-20' போர்ட் எலிசபெத்
நவ. 13 3வது 'டி-20' செஞ்சுரியன்
நவ. 15 4வது 'டி-20' ஜோகனஸ்பர்க்

Advertisement