மயிலம் பொறியியல் கல்லுாரியில் தேசிய புதுமை தொழில்நுட்ப விழா

விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா மற்றும் 'டெக்னோவேஷன் 2024' தலைப்பில் போட்டிகள் நடந்தது.

மயிலம் பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். டீன் ராஜப்பன் வரவேற்றார். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.

நாஸ்காமின் தேசிய தலைவர் உதயசங்கர், கல்வி, போட்டிகளில் பங்கேற்பதன் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு பற்றி கூறினார்.

Advertisement