40 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் மீன்மார்க்கெட்டில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார்தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் மீன்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

விற்பனைக்கு வைத்திருந்த மீன்களைநடமாடும் உணவு பகுப்பாய்வு கூடத்தின் மூலம்,பகுப்பாய்வாளர் சரவணன்உடனடி ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின்,ரசாயனம் கலந்த மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும், 30 கடைகளில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன 40 கிலோ மீன்களைபறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது. ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது.

நல்ல தண்ணீரில் தயார் செய்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்த வேண்டும் எனவியாபாரிகளுக்குஅறிவுரை வழங்கினர்.

Advertisement