ராகுலுக்கு ஜிலேபி: 1 கிலோ ஆர்டர் போட்டு கொண்டாடிய பா.ஜ.,!

4

புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஒரு கிலோ ஜிலேபியை ஆன்லைனில் பா.ஜ., ஆர்டர் செய்தது, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


ஹரியானா சட்டசபை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாநில பா.ஜ.க., வெற்றி கொண்டாட்டத்தின் இடையே, கேளிக்கையாக, டில்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள பிகனெர்வாலா ஸ்டோரில் இருந்து 1 கிலோ ஜிலேபிக்கு பாஜ ஆர்டர் செய்தது.


அந்த ஆர்டரில்,வரி உட்பட ரூ.609. பெறுநரின் முகவரி 24, அக்பர் சாலை -டில்லி காங்கிரஸ் தலைமையகம் என குறிப்பிட்டு, பெறுநர் பெயரில், ராகுலுக்கு ஜலேபி என அந்த கவரில் எழுதியிருந்தது.


ஜிலேபியை பெறுபவர் பணம் செலுத்தும் வகையில் கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யப்பட்டிருந்தது.ஹரியானாவின் குஹானாவில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் இருந்து ஜிலேபியை ருசி பார்த்த ராகுல், பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்.


ஜிலேபி ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால் சரியாக மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், ஜிலேபி தொழிற்சாலைகள் இல்லை என்று பா.ஜ.,வினர் ட்ரோல் செய்தனர்.

தற்போது, ஹரியானா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடிய பாஜக மறக்காமல்,ஜிலேபி பார்முலாவாக எடுத்து, ராகுலுக்கு ஒரு கிலோ ஜிலேபி பார்சலை ஆர்டர் போட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

Advertisement