எனது சிறந்த நண்பர்; நல்ல மனிதர்: பிரதமர் மோடியை புகழும் டிரம்ப்

5

வாஷிங்டன்: ''பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். நல்ல மனிதர்,'' என குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். நல்ல மனிதர். அவர் பிரதமர் ஆக பதவியேற்பதற்கு முன்னர், இந்தியா நிலையில்லாமல் இருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்தது. இதில், நானும், அவரும் பங்கேற்றது சிறப்பானது. இந்த நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேர் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. இன்று அதேபோன்ற நிகழ்ச்சி ஒன்றை செய்ய முடியாத நிலை உள்ளது.

ஒரு சில தருணங்களில் சிலர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தனர். அப்போது சிறந்த நட்பு இருந்ததால், உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறினேன். அதற்கு மோடி ஆவேசமாக, இந்த பிரச்னையை நான் பார்த்து கொள்கிறேன். தேவைப்படும் அனைத்தையும் செய்வோம். 100 ஆண்டுகளாக அவர்களை தோற்கடித்து வருகிறோம் என்று கூறிவிட்டார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Advertisement