நியூசி., அணி அறிவிப்பு * இந்திய டெஸ்ட் தொடருக்காக...

ஆக்லாந்து: இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டிகள் பெங்களூரு (அக். 16-20), புனே (அக். 24-28), மும்பையில் (நவ. 1-5) நடக்கவுள்ளன.
இதற்கான 17 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டிம் சவுத்தீ பதவி விலகியதால், டாம் லதாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் வீரர் வில்லியம்சன், தொடையின் பின்பகுதி காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். இவருக்குப் பதில் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டார்.
சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி, 2, 3வது டெஸ்டில் மட்டும் பங்கேற்க உள்ளார்.
அணி விபரம்: டாம் லதாம் (கேப்டன்), பிளண்டெல், பிரேஸ்வெல், சாப்மென், கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்கே, அஜாஸ் படேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி, டிம் சவுத்தீ, வில்லியம்சன், வில் யங்.

Advertisement