பளுதுாக்குதல் முத்துபாண்டி சாதனை

காங்க்ரா: தேசிய பளுதுாக்குதலில் புதிய சாதனை படைத்தார் தமிழகத்தின் முத்துபாண்டி ராஜா.
இமாச்சல பிரதேசத்தில் தேசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் (யூத், ஜூனியர், சீனியர்) நடக்கிறது. 480 வீரர், 380 வீராங்கனை என மொத்தம் 860 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 'சீனியர்' 61 கிலோ பிரிவில் ரயில்வே அணிக்காக களமிறங்கிய தமிழகத்தின் முத்துபாண்டி ராஜா களமிறங்கினார். ஸ்னாட்ச் பிரிவில் 124, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 165 என மொத்தம் 289 கிலோ துாக்கி, தங்கம் வென்றார்.
தனது முந்தைய இலக்கை (279 கிலோ) தகர்த்து, புதிய தேசிய சாதனை படைத்தார். தவிர, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவிலும் இது புதிய சாதனை ஆனது. இதற்கு முன் 2023ல் 158 கிலோ துாக்கி இருந்தார்.

Advertisement