குளித்தலையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு


குளித்தலையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
குளித்தலை, அக். 10-
குளித்தலை வட்டாரம், இனுங்கூர் பகுதி அரசு விதை பண்ணை மற்றும் துவரை, எள், நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் பகுதிகளை, சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தின் வேளாண்மை துணை இயக்குனர் (கரூர் மாவட்ட மண்டல அதிகாரி) கோப்பெருந்தேவி ஆய்வு செய்தார்.
அப்போது, தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தில் துவரை விளக்க திடல் மற்றும் துவரை, எள், நிலக்கடலை விதைகள் அரசு மானியத்தில் பெற்று பயனடையவும், துவரை செடியில் நுனிக்கிள்ளுதல், பயறு நுண்ணுாட்டச்சத்து ஏக்கருக்கு, 2 கிலோ இடுதல், பூக்கும் தருணத்தில் டிஏபி கரைசல் தெளித்தல், எள் சாகுபடி செய்த வயலில் செடிகளை வரிசைப்படுத்தி மாங்கனிஸ் சல்பேட் நுண்ணுாட்டச்சத்து ஏக்கருக்கு, 2 கிலோ இட்டு மண் அணைத்தல் போன்ற தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து துவரை, எள் விதை பைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.ஆய்வின் போது, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பார்த்திபன், குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் மகேந்திரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) கணேஷ்மூர்த்தி, வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) மணிகண்டன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement