வசீகர வர்த்தகத்துக்கு வித்திட்ட ரத்தன் டாடா

டாடா குழும நிறுவனத்துக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது. திருமணம் செய்யாமல் தன் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். 'என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்' என குறிப்பிடுவார். அதன்படி வாழ்நாளின் இறுதி வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஜெட்சி டாடாவின் கொள்ளு பேரன் ரத்தன் டாடா. 1948ல் பெற்றோர் பிரிந்து விட, பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார்.

1959ல் அமெரிக்காவில் படிப்பு முடித்ததும், ஐ.பி.எம்., நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் தாய்நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என நாடு திரும்பினார். டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார்.

சொந்த நிறுவனம் எனினும் துவக்கத்தில் சிறிய பொறுப்புகளையே செய்தார். 1961ல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றினார். அதுவே அவரை பெரிய தொழிலதிபராக மாற்றியது. 1970ல் டி.சி.எஸ்., நிறுவனத்தில் நுழைந்தார்.

படிப்படியாக உயர்ந்து டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினார். 1986--1989ல் ஏர் இந்தியா விமான நிறுவன தலைவராக பணியாற்றினார். இவர், 1991ல் டாடா குழுமத்தின் தலைவராக, அப்போதைய தலைவர் ஜே.ஆர்.டி., டாடாவால் நியமிக்கப்பட்டார்.
வருமானத்தை உயர்த்திய டாடா இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தலைமை பொறுப்பை ஏற்ற இவர், டாடா குழுமத்தின் மறுசீரமைப்பு பணியை தொடங்கினார்.

ஊழியர்களுக்கு சலுகைகள், ஓய்வூதிய வயது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வணிகத்தை உயர்த்தினார். உலகின் ஒவ்வொரு நாட்டின் சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என இவர் பொறுப்பேற்ற பின் அனைத்துத் துறையிலும் டாடா கால் பதித்தது.

21 ஆண்டு தலைமை



பொறுப்பில் இருந்த இவர் டாடாவின் வருமானத்தை 40 மடங்கும், லாபத்தை 50 மடங்கும் உயர்த்தினார். ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் இவரது டி.சி.எஸ்., நிறுவனம் படைத்தது. சாமானியருக்கும் கார்லேண்ட்ரோவர், ஜாக்குவார் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா.இது ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது.
இதனால் இந்திய கார்களுக்கு மார்க்கெட் அதிகமானது.


'கோரஸ்' என்ற உலகின் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா ஸ்டீல் வாங்கியது. உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தாலும் உலக சந்தையில் அசைக்க முடியாத இடத்தை டாடா பிடித்துள்ளது.

தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து ஈட்டப்படுகிறது.
சாமானியரும் சொந்தமாக காரில் செல்லலாம் என்ற கனவை நனவாக்கும் நோக்கில் உலகிலேயே விலை குறைவாக ரூ. ஒரு லட்சத்தில் 'நானோ கார் ' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பலரும் கேலி செய்தனார். ஆனால் வெற்றிகரமாக சந்தைப்படுத்தி சாதனை படைத்து கார் உற்பத்தியில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
தேசப்பற்று ஒருமுறை சுமோ கார்கள் தயாரிப்பு ஆர்டரை டாடா நிறுவனத்துக்கு அளிக்க முன் வந்தது. ,

ஆனால் 'பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது' என ஆர்டரை நிராகரித்தார்.
பணம்தான் முக்கியம் என பலரும் செயல்படும் நிலையில், தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என கருதினார். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் இவரது தாஜ் ஓட்டல் சேதமடைந்தது. மனம் தளராத இவர், மீண்டும் பழைய நிலைக்கு புதுப்பித்தார்.
அடுத்த தலைமை 2012ல் தன் 75 வயதில் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகினார். 2016 - 2017ல் இடைக்கால தலைவராக பதவி வகித்தார். 2017ல் என். சந்திரசேகரனை தலைவர்
பதவியில் அமர்த்தினார்.

சிவந்த கரங்கள்



டாடா நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய்க்கு உதவி செய்துள்ளார். தான் படித்த அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில், இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ. 235 கோடி ஒதுக்கினார். பட்டப்படிப்பு முடித்த ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுக்கு ரூ. 491 கோடி அளித்தார். 2014ல் மும்பை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் வடிவமைப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக ரூ. 95 கோடி வழங்கினார்.


முதலிடம் டுவிட்டரில் 1.31 கோடி பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்தியாவில் அதிகம் பேர் பின் தொடரும் தொழிலதிபர் இவர்தான்.திறமையான விமானி ரத்தன் டாடாவுக்கு விமானத்தில் பறப்பது மிகவும் பிடிக்கும். திறமையான விமானியான இவர், 2007ல் 'எப்-16 பால்கன்' விமானத்தை இயக்கிய முதல் இந்தியரானார்.

நாய்கள் பிடிக்கும்



ஜே.ஆர்.டி. டாடாவின் காலத்தில் இருந்தே மழையின் போது டாடா சன்ஸ் தலைமையகத்தில், கருணையுடன் தெருநாய்களை உள்ளே விடுவது வழக்கம். ரத்தன் டாடாவுக்கு நாய்கள் மீது அன்பு உண்டு. அவ்வழக்கத்தை தொடர்ந்த இவர், அவை விளையாடுவதற்கு பொம்மைகள், தண்ணீர், உணவு வழங்க வசதி ஏற்படுத்தினார். டிட்டோ, மாக்சிமஸ் என 2 செல்ல நாய்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

காதல் தோல்வி



நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை எனக் கேட்டதற்கு, 'நான்கு முறை திருமணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது' என சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னவர் டாடா.
லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தபோது அவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் 1962 இந்திய-சீனப் போர் காரணமாக, பெண்ணின் பெற்றோர் இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

Advertisement