விவசாயிகளுக்கு சுழல் கலப்பை

திருப்பூர் : குண்டடம் வட்டம், மானுார் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு, 46 ஆயிரத்து 800 ரூபாய் மானியத்தில், சுழல் கலப்பை வழங்கப்பட்டது.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண் உதவி இயக்குனர் பழனிக்குமார், வேளாண் அலுவலர் கவி பிரியா, உதவி வேளாண் அலுவலர் பாலாஜி ஆகியோர், பார்வையிட்டனர். சுழல் கலப்பை பெற்ற விவசாயியின் அனுபவத்தை கேட்டறிந்தனர்.

திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறுகையில், ''விவசாய நிலங்களில் மண் வளம் பேண, களைகளை அகற்ற, உழவு செய்ய சுழல் கலப்பை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது

சுழல் கலப்பை வாயிலாக நிலத்தை உழுவதன் வாயிலாக, காற்றில் ஈரப்பதம், மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. உயிர்சத்துகள் மண்ணில் அதிகரித்து, மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. களைகளின் பாதிப்பும் குறைகிறது,'' என்றார்.

Advertisement