கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் முகமை!

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமப்புற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. 1999 ஏப்., முதல் நிர்வாக செலவினங்களை நிர்வகிக்க தனி நிறுவனமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிராமப்புற மேம்பாடு முகமையினை வலுப்படுத்தவும், வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பு வகிக்கின்றனர்.

லோக்சபா உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவர்.

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன.

இத்திட்டங்களின் பயன்களை பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது.

ஊரக பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.

கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், தாய் திட்டம், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், எல்.இ.டி., விளக்குகள்.

தேசிய வேலை உறுதித்திட்டம், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்), லோக்சபா உறுப்பினர், உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், துாய்மை பாரத இயக்கம், தேசிய ரூர்பன் திட்டம், லோக்சபா உறுப்பினர் மாதிரி கிராமிய திட்டம்.

Advertisement