கிராமத்தில் வளர்ச்சி பணி தலைவரின் கடமை என்ன?

ஊராட்சி மன்ற தலைவர் அந்த ஊராட்சியின் செயல் அதிகாரியும் ஆவார். அந்த ஊராட்சியில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரிப்பு செய்வது அவர் அதிகாரத்துக்கு உட்பட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவது அவரது தலையான பணி.

வீடு கட்டுவதற்கான வரைபடங்களை அங்கீகாரம் செய்வதற்கும், அனுமதி அளிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உண்டு. அந்த ஊராட்சியில், பொது சுகாதாரத்தை பேணிக் காக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. இதுதவிரவும் அரசு ஒப்படைக்கும் திட்டங்கள் அவர் நிறைவேற்ற கடமைப்பட்டவர்.

உதாரணமாக இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கான பயனாளிகளை பரிந்துரை செய்யலாம். இதுதவிர, ஊராட்சி விரும்பினால் சமூக காடுகளை தோற்றுவித்து பராமரிப்பு செய்யலாம். முக்கியமாக அந்த ஊராட்சி மக்களின் கோரிக்கைகளை அரசு மற்றும் அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது ஒரு ஊராட்சி மன்ற தலைவரின் தலையாய கடமை. தொற்றுநோய் ஏற்படும் காலத்தில் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement