வளர்ச்சிப் பாதையை நோக்கி அரகண்டநல்லுார் பேரூராட்சி

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மாவட்டத்தின் முன்னணி பேரூராட்சியாக உருவெடுத்து வருகிறது என அதன் தலைவர் அன்பு கூறினார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது.

அரகண்டநல்லூர் பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகும். நகரின் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் பொன்முடியின் மேற்பார்வையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள், கழிவு நீர் கால்வாய், கல்வெட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் என மொத்தம் ரூ. 7.36 கோடி மதிப்பீட்டில் நகர மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ள பட்டுள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலர் முரளி, துணைத் தலைவர் கதிஜாபீவி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் இவ்வாறு கூறினார் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு.

Advertisement