பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை இயற்கை வேளாண்மையில் ஒரு பசுமை புரட்சி

திருக்கோவிலூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் பசுமை புரட்சியாக இயற்கை வேளாண் யுத்திகளை வழங்கி வருகிறது.

பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் உற்ற நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் சாதனை படைக்கும் ஆலை நிர்வாகம், விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவதற்கு நவீன மற்றும் தொழில்நுட்ப யுத்திகளையும் வேளாண் அறிஞர்கள் மூலம் வழங்கி வருகிறது.

ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன் சுற்று சூழல் மாசடைகிறது. இது மனித குலத்திற்கு பெரும் தீங்காக அமைந்துள்ளது.

மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளிடம் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இயற்கை உரங்கள், நோய் தடுப்பு பூச்சி கொல்லிகளை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான இயற்கை வழியிலான பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விவசாயிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

நுண்ணுயிர் உரங்கலான தழைச்சத்திற்கு பண்ணாரி அசோஸ்பைரில்லம், பண்ணாரி ரைசோபியம், பண்ணாரி அசட்டோ பேக்டர், பண்ணாரி குளுக்கனோ அசிட்டோ பேக்டர். மணி சத்தை அதிகரிக்க பண்ணாரி பாஸ்போ பேக்டீரியம், பண்ணாரி அவமோரி, நுண்ணூட்டச்சத்திற்கு பண்ணாரி வேம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.மாசற்ற இயற்கை வேளாண்மையை நோக்கிய பயணத்தில் விவசாயிகளுடன் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான சுத்தமான ஆலை வளாகம் அனைவரையும் பெருமிதம் கொள்ளும் வகையில் உள்ளது.

இங்கு இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 15 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் விவசாயிகள், பொதுமக்கள், ஆலை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வேளாண்துறையில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை புரட்சி செய்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

Advertisement