அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

4

சேலம்: 'நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

சேலம், எடப்பாடியில் நீட் தேர்வால், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் போலி அறிவிப்பால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.,வும்., காங்கிரசும் தான்.


போலி நாடகம்




நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பலமுறை பிரதமரைச் சந்தித்தும் அழுத்தம் கொடுக்கவில்லை. மருத்துவ கனவு உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக தவறான முடிவை எடுக்காமல் இதர கோர்ஸ்களில் சேர்ந்து வாழ்வில் முன்னேறலாம்.



என்ன பயன்?



மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பி ஏமாந்த மாணவர்கள் உயிரை விட்டு வருகிறார்கள். 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு என்ன பயன்? தி.மு.க., எம்.பிக்கள் தகுந்த அழுத்தம் கொடுத்திருந்தால் நிச்சயம் தீர்வு கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement