ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றம்

6


திருவனந்தபுரம்: ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது,

இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மாநில சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் ராஜேஷ் தாக்கல் செய்தார். அவர் பேசியது, மத்திய அரசின் ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்து வதாகும். இது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் மாநில அரசுகளின் அரசியலமைப்பு அதிகாரத்தின் மீதான தாக்குதல் என்றார்.

இதை தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒரு நாடு,ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளா எனவும் கூறப்படுகிறது.

Advertisement