மனிதர்- வனவிலங்கு மோதல்: கேரளாவில் 9 ஆண்டில் 915 பேர் உயிரிழப்பு!

1


திருவனந்தபுரம்: கேரளாவில் மனிதர்கள் - விலங்கு மோதலில் 9 ஆண்டுகளில் 915 பேர் உயிரிழந்துள்ளனர். 7,917 பேர் காயமடைந்துள்ளனர் என மாநில அரசு கூறியுள்ளது.

உணவு தேடி, வழி தவறி என பல்வேறு காரணங்களுக்காக வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அப்போது, மனிதர்களுக்கும் வனவிலங்குகள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழக்கும் சோகம் நடக்கிறது. வனத்துறையினர் வந்து தான், வனவிலங்குகளை வனத்திற்குள் விரட்டுகின்றனர்.

இந்நிலையில் கேரள சட்டசபையில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 9 ஆண்டுகளில் மனிதர்கள் மற்றும் வினவிலங்குகள் மோதலில் 915 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 2018- 19ல் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.27 கோடி வழங்கப்பட்டு உள்ளது.



மொத்தம் 7,917 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு ரூ.24 கோடி வழங்கப்பட்டது. இந்த மோதலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, சோலார் வேலி, தடுப்புகள் உள்ளிட்டவை அமைப்பதற்காக ரூ.33.19 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.


இந்த மோதல் தொடர்பாக வனத்துறை 39,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிகம் மோதல் நடக்கும் இடங்களாக 281 பஞ்சாயத்துகள் கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement