புளோரிடாவை தாக்கிய மில்டன் புயல்: 9 பேர் உயிரிழப்பு

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின் மினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



சீஸ்டா கீ அருகே , நேற்று 3 புயல்கள் தாக்கின. மணிக்கு 120 மைல் வேகத்தில் புயல் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு மையம் தெரிவித்தது.

புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: செயின்ட் லூசி கவுண்டி கிராமத்தில் புயலால் நான்கு பேர் உயிரிழந்தனர். மேற்கு-மத்திய பிராந்தியத்தில் உள்ளவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரசோட்டாவின் சியஸ்டா கீ அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. புயல் தற்போது புளோரிடாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து நகர்ந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதிபர் பைடன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: புயலால் பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக,இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அறுந்து விழுந்த மின்கம்பிகள், குப்பைகள், சாலைகள் துர்நாற்றம் ஆகியவை ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றன.மீட்பு படையினர் உதவி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement