அனைத்து துறைகளுக்கும் முன்னோடி

மணிவண்ணன், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்:

சிறந்த தொழிலதிபர்கள் என்போர், நிறைய பணம் வைத்திருப்போர் தான் என்ற பொதுவான பார்வையுண்டு.

அதை தாண்டி, தன் நிறுவனத்துக்கான தரத்தை பல ஆண்டுகளாக நிலைநிறுத்தி, நுகர்வோரை திருப்திப்படுத்திய ரத்தன் டாடா, தனது கொள்கையில் கடைசி வரை சமரசப்படுத்தி கொள்ளவே இல்லை; அவரது வெற்றியே அதுதான். அவரது கொள்கை, கோட்பாடு தொழிற்துறைக்கு மட்டுமானதல்ல; அனைத்து துறைகளுக்கும் அது பொருந்தும்.

நாம் செய்யும் வேலையில் தரம், சமரசம் செய்து கொள்ளாத தன்மை, அதிக ஈடுபாடு மற்றும் கடின உழைப்பு இருந்து விட்டால், தவிர்க்க முடியாத மனிதர்களாக நாம் உருவாக முடியும் என்பதற்கு, ரத்தன் டாடா சிறந்த உதாரணம். அவரிடம் இருந்து புதிதாக வரும் சிறு, குறு தொழில் முனைவோர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

பாரதியார் போன்ற இலக்கியவாதிகளை பார்த்து தான், சமுதாயத்தில் ஜெயிக்க வேண்டும்; தேசத்தின் பெரிய அடையாளமாக மாற வேண்டும் என்பதில்லை. ரத்தன் டாடா போன்ற தொழிலில் சாதித்தவர்களையும் முன்னுதாரணமாக கொண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

Advertisement