இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்:டு அனைத்து துறைகளுக்கும் தலையாய முன்னோடி

சுமிதா ரவி, தலைவர், பெண்கள் துணைக்குழு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:

கடந்த, 30 ஆண்டுகளாக ஆடை வர்த்தக துறையில் ஈடுபட்டு வருகிறேன். ஆண், பெண் தொழில் முனைவோர் யாராக இருப்பினும், தங்களது தொழிலில் வெற்றி பெற சரியான திட்டமிடல், நேரம் தவறாமை, சரியான முன்னெடுப்பு, தொழிலை சரியான முறையில் நடத்தி செல்லுதல் என்பது மிக முக்கியம். இந்த பண்புகள் அனைத்தும், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிடம் இருந்தன; அதனால் தான் அவர் வெற்றியாளராக மாறினார்.

எந்தத் தொழிலையும் பொறுத்தவரை லாபம், வியாபார தர்மம் என்பதும் மிகவும் முக்கியம்; அதையும் ரத்தன் டாடா திறம்பட கையாண்டார். அந்த வகையில், இந்திய தொழில் துறையினரின் முன்னோடியாக விளங்கினார். குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தொழில்துறையில் கால்பதிக்கும் இரண்டாம் தலைமுறையினர், அந்நிறுவனத்தின் நிறுவனர் அல்லது வழிகாட்டிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை பெற்று செயல்பட வேண்டும். நான், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேலை முன்னோடியாக கொண்டு செயல்படுகிறேன்.

Advertisement