நுட்பம் மாற்றினேன் சம்பாத்தியம் கூடியது

கோவில் பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 33; விவசாயி. விவசாயிகள் ஆடுகளை குத்து மதிப்பாக விற்பனை செய்வர். ஆனால், இவர் உயிர் எடையில் மட்டும் விற்பனை செய்கிறார்.

அவர் கூறியதாவது:

ஆடுகளை வளர்த்து வந்தேன். மாதம் ஐந்தாயிரம் கிடைப்பதே பெரிய விஷயம். வீட்டு கடனை கூட கட்ட முடியவில்லை. நாளடைவில் இளம் கிடா குட்டிகளை வாங்கி தோட்டத்தில் வளர்த்து விற்பனை செய்கிறேன். இதன் மூலம் மாதம், 30 முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். ஆடு வளர்ப்பே என்னை கடனில் இருந்து மீட்டது. கிலோ, 470 முதல், 570 ரூபாய் வரை குட்டிகளை விற்பனை செய்கிறேன். சீசன் காலத்தில் குட்டிகளை அதிக விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்க வேண்டி உள்ளது.

கருப்பு ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வெளியூர்களில் டை அடித்து ஏமாற்றி விற்கிறார்கள். வாங்கும்போது கவனமாக இல்லாவிட்டால் பெயர் கெட்டுவிடும். நேர்மையாக தொழில் செய்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement