புதிய கண்டுபிடிப்பில் பரிசு பெற்ற பொறியியல் கல்லுாரி மாணவர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிமாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் கண்டுபிடிப்பில் 2ம் இடம் பெற்றுரொக்கப்பரிசு வென்றுள்ளனர்.

நான் முதல்வன் நிரல் திருவிழா சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 414 பொறியியல் கல்லுாரிகளில்இருந்து 25 ஆயிரம் திறன்மிகுமாணவர்களுக்கிடையே 8500 கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டன.

அதில் ராமநாதபுரம் அண்ணா பல்கலைபொறியியல் கல்லுாரி கணினி துறை மாணவர்கள் எஸ்.சதீஷ்குமார், எம்.சைபன் அலி, எஸ்.பிரபாகரன் ஆகியோர் கண்டுபிடித்த ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள்பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இடியு.,ஏஆர் (EduAR) என்ற செயலி வடிவமைப்பு இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டது. பரிசுத்தொகை ரூ.1 லட்சத்தை மாணவர்களுக்கு துணைமுதல்வர் உதயநிதி வழங்கினார்.

சாதித்த மாணவர்களை கல்லுாரி முதல்வர் உதயகுமார், துறைத் தலைவர் உமா மகேஸ்வரி, கல்லுாரி நான் முதல்வன் நிரல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் மணிகண்டன், கண்காணிப்பாளர் ராஜ்குமார், உதவிபேராசிரியர் மணிராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement