பகுதி நேர ரேஷன் கடை அமைக்க உடனடி ஆய்வு

முதுகுளத்தூர்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வெளியான அன்றே முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு ரேஷன் கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 5 கி.மீ., முதுகுளத்துார் சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இதனால் ரேஷன் பொருட்கள் வாங்கும் நாட்களில் அத்தியாவசிய வேலைக்கும், விவசாயம் பணிக்கும் செல்ல முடியவில்லை.

இலவச பொருட்களை கொண்டு வருவதற்கு கூட பணம் செலவு செய்யும் அவல நிலை உள்ளது. இதனால் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக காத்தாகுளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது, கட்டடம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, முதுகுளத்துார் வட்ட வழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தனர்.

பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது குறித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement