பூக்கள் தேவை அதிகரிப்பு: விலை 3 மடங்கு உயர்வு

ராமநாதபுரம்: ஆயுத பூஜையை முன்னிட்டுபூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலைமூன்றுமடங்கு உயர்ந்து மண்டபம்மல்லிகை கிலோ ரூ.1200க்கு நேற்று விற்கப்பட்டது.

ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம், மண்டபம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து மல்லிகை சாகுபடியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

பிற பகுதி நாற்றுகளை விட தங்கச்சிமடம் மல்லிகை நாற்றுகள் நன்றாக வளர்ந்து வாசனை மிகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.

மல்லிகைப் பூ பங்குனி, சித்திரை சீசன் காலக்கட்டத்தில் கிலோ ரூ.300க்கு விற்கிறது.

அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ. 1500 முதல் ரூ.2000 வரை விற்கிறது.

தற்போது மழை காரணமாக மண்டபம், தங்கச்சிமடம் பகுதியிலிருந்து மல்லிகை வரத்து குறைந்துள்ளது.

அதே சமயம் ஆயத பூஜை விழாவிற்காகதேவை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.400க்கு விற்ற உதிரி மல்லிகை தற்போது கிலோ ரூ.1100 முதல் ரூ.1200 வரை தரத்திற்கு ஏற்பவிற்கிறது.

இதே போல கிலோ ரூ.100க்கு விற்ற அரளி ரூ.1000, ரோஜா ரூ.400, மரிக்கொழுந்து ரூ.300 மற்றும் கனகாம்பரம் ரூ.1500 என வழக்கத்தை விட மூன்று மடங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினர்.

Advertisement