மக்களை அவமானப்படுத்தும் காங்.,: கார்கேவுக்கு பா.ஜ., பதிலடி

1

புதுடில்லி: '' மக்களை அவமானப்படுத்துவதே காங்கிரசின் அடையாளம்'' என பா.ஜ., கூறியுள்ளது.


காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும் போது, காங்கிரஸ் அர்பன் நக்சல் கட்சி என மோடி கூறி வருகிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது பா.ஜ., எப்படி? அவர்கள் தான் அநியாயக் கொலைகளில் தொடர்புடைய பயங்கரவாத கட்சி. காங்கிரஸ் கட்சியை அவ்வாறு சொல்வதற்கு மோடிக்கு உரிமை கிடையாது எனக்கூறியிருந்தார்.


இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா கூறியதாவது: மக்களை அவமானப்படுத்துவதே காங்கிரசின் அடையாளம். கோடிக்கணக்கான மக்கள் பா.ஜ.,விற்கு 2014, 2019, 2024 ல் ஓட்டுப் போட்டுள்ளனர். காங்கிரசின் இந்த விமர்சனமானது, மக்களின் ஞானத்தை அவமானப்படுத்துவதற்கு சமம். இதனை காங்கிரஸ் ஒரு பழக்கமாக செய்கிறது. அனைத்தையும் விட குடும்பத்தினரையே அக்கட்சி முதன்மையானதாக கருதுகிறது. ஹரியானா தேர்தலுக்கு மின்னணு ஓட்டு இயந்திரம், தேர்தல் கமிஷன், மக்களை காரணமாக காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா மக்களை அசுரர்கள் என விமர்சித்தார்.

தற்போது பயங்கரவாதிகளை மக்கள் தேர்வு செய்துள்ளதாக கூறுகின்றனர். பிரதமர் மோடியையும், ஓபிசி பிரிவினரையும் இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்துகின்றனர். தற்போது மக்களை விமர்சிக்க துவங்கிவிட்டனர். இது காங்கிரசின் டி.என்.ஏ.,வை காட்டுகிறது. தலித்களை பற்றி காங்கிரஸ் பேசுகிறது, ஹரியானாவில் குமாரி செல்ஜாவிற்கு என்ன செய்தார்கள். கர்நாடகாவில் தலித்களுக்கான பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். காங்கிரஸ் தலித்களுக்கு எதிரான கட்சி இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement