கல்வியில் சிறந்து விளங்கும் வடலுார் எஸ்.டி. ஈடன் பள்ளி

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தாளாளர் சுகிர்தா தாமஸ் சீரிய நிர்வாகத்திறனும், தீபக் தாமஸ் புதிய தலைமுறையின் உத்வேகத்துடனும், வடலுார் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் 41 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ்.டி.ஈடன் பள்ளிக்குழுமம் பெற்றோர்களின் ஆதரவுடன் வெற்றி நடைபோடுகிறது.

சமீபத்தில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்ததற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கவரவித்தார்.

மேலும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக இப்பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார். காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பேச்சு போட்டியில், மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று ரொக்க பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளியில் பரதம், யோகா, கராத்தே மற்றும் நடனப்பயிற்சியும் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஒருமுறை கலைநிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியிலேயே சிறப்பு 'நீட்' மருத்துவத் தேர்விற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த வடலுாரில் இப்படியும் ஒரு சாதனைப்பள்ளி இருப்பது பெருமையே! கல்வி ஒழுக்கத்தில் சிறந்த எஸ்.டி.ஈடன் பள்ளி மதிப்பிலும், மதிப்பெண்ணிலும் முதலிடம் என்பதில் ஐயமில்லையே

Advertisement