பொது பயன்பாடு சேவை பிரச்னைக்கு மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்

கடலுார் : பொது பயன்பாட்டு சேவையில் ஏற்படும் பிரச்னைகளை விரைவாக, பொருள் செலவின்றி தீர்க்க, நிரந்த மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என, மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு மக்கள், எளிய முறையில் விரைவாகவும், நீதிமன்ற கட்டணமின்றி நிவாரணம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத்தீர்வு மையத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

இங்கு தீர்வு காணக்கூடியபொது பயன்பாட்டு சேவைகள் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 22 ஏஉட்பிரிவு பி.,யில் வரையறை செய்யப்பட்டுள்ளது.அதில், போக்குவரத்துசேவைகள், அஞ்சல் மற்றும் தொலைபேசி சேவைகள், மின்சாரம், குடிநீர் வழங்கும் நிறுவனங்களின் சேவைகள், பொது துப்புரவு, பொது சுகாதார சேவைகள், மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவைகள்,காப்பீடு தொடர்பான சேவைகள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பானசேவைகள், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சேவைகள் இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமல்லாது மத்திய, மாநில அரசின் அறிவிப்புகள் மூலம்அவ்வபோது, சேர்க்கப்படும். இதர சேவைகள் தொடர்பாகவும் நிரந்தர மக்கள்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொது பயன்பாட்டு சேவைகளில் ஒரு கோடி பண மதிப்பு கொண்ட பிரச்னைதொடர்பான வழக்குகளை, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்போஅல்லது வழக்கு தாக்கல் செய்யாமலேயே சமரச முயற்சிகள் மூலம் இங்கு தீர்வுகாணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement