முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் காஞ்சியில் கிலோ ரூ.20க்கு விற்பனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்து, கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவிலும் முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மாதம் காஞ்சிபுரம் சந்தையில் கிலோ முள்ளங்கி 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது, காஞ்சிபுரத்திற்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் ஹாஸ்பிட்டல் சாலையைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஆர்.என். சங்கர் கூறியதாவது:

தமிழகத்திலும், ஆந்திர மாநிலத்திலும் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்திற்கு சில நாட்களாக முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த மாதம் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி, தற்போது, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை மலிவாக உள்ளதால், பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement