முறையூர் கோயிலில் அம்பு விடும் திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி மகிஷாசூரனை அம்புவிட்டு சம்ஹாரம் செய்யும் விழா நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் நவராத்திரி விழா அக். 3 ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மகிஷாசூரன் என்ற அரக்கனை விஜயதசமி நாளன்று பார்வதிதேவி அம்பு எய்தி அழித்ததாக புராணம்.

இதையொட்டி நவராத்திரி நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் வில் அம்புகளுடன் அம்மன் புறப்பட்டார். 6:00 மணிக்கு சம்ஹார பொட்டலில் சூரனை அம்பு விட்டு சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார் 4 திசைகளிலும் அம்பு எய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement