திருப்புத்துாரில் நவராத்திரி விழா நிறைவு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் , பெருமாள் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவு நாளில் அம்மன், மகாலெட்சுமி அம்புடன் எழுந்தருளினார்.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருத்தளிநாதர் கோயிலில் அக்.3ல் நவராத்திரி விழா துவங்கியது.

திருநாள் மண்டபத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டிருந்தது.தினசரி இரவில் கொலுவில் பல அலங்காரங்களில் எழுந்தருளிய உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

நேற்று திருநாள் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் அம்புடன் எழுந்தருளிய அம்மனுக்கு இரவு 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் அம்மன் புறப்பாடாகி கீழ ரத வீதியில் எழுந்தருளி, அங்கு அம்பு எய்தல் நடந்தது. திருவீதி வலம் வந்து கோயில் எழுந்தருளினார்.

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா நாட்களில் காலை 10:00 மணிக்கு மகாலெட்சுமிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்றது.

கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.தினசரி வெவ்வேறு அலங்காரங்களில்

உற்ஸவ மகாலெட்சுமி எழுந்தருளினர். நேற்று குதிரை வாகனத்தில் அம்புடன் எழுந்தருளி இரவில் தீபாராதனை நடந்தது. நேற்று கல்வி கற்க துவங்கும் குழந்தைகளுக்கு காலை 10:30 மணி

அளவில் வித்யாரம்ப வைபவம் நடந்தது. இரவில் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்தனர்.

Advertisement