இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ்

முல்தான்: இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் திரும்பினார்.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று, முல்தானில் 2வது டெஸ்ட் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணி அறிவிக்கப்பட்டது.

'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் 33, கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடையின் பின்பகுதி காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை.

வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார். 'சுழல்' வீரர்களான சோயிப் பஷீர், ஜாக் லீக், இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். அட்கின்சனுக்கு பதிலாக மாத்யூ பாட்ஸ் தேர்வானார்
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலே, பென் டக்கெட், போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், மாத்யூ பாட்ஸ், ஜாக் லீச், சோயிப் பஷீர்.

Advertisement