கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

2


புதுடில்லி: கனடாவுடனான தூதரக உறவை இன்று (அக்.14) இந்தியா திரும்ப பெற்றதையடுத்து மேலும் ஆறு தூதரக அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.


இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை திரும்ப பெறுவதாக இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து இன்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கனடா தூதரக அதிகாரிகள் 6 பேர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது.
அவர்கள் விவரம்:

1) ஸ்டீவார்டு ரோஸ் வீலர் : தூதரக அதிகாரி

2) பேட்ரிக் ஹீபர்ட்: துணை தூதரக அதிகாரி

3) மேரி கேத்ரின் ஜோலி: முதன்மை செயலர்.

4) இயான் ரோஸ் டேவிட் டீரிட்ஸ்: முதன்மை செயலர்

5) ஆடம் ஜேம்ஸ் சூயிப்கா: முதன்மை செயலர்

6) பவுல் ஒர்ஜூலையோ: முதன்மை செயலர்




ஆகியோர் வரும் 19ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement