திலக் வர்மா கேப்டன்: இளம் இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில், அக். 18-27ல் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா 'ஏ' அணி 'பி' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் (அக். 19), யு.ஏ.இ., (அக். 21), ஓமன் (அக். 23) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக திலக் வர்மா 21, நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவுக்காக 4 ஒருநாள், 16 சர்வதேச 'டி-20' போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றனர். துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டார். இவர், 8 சர்வதேச 'டி-20'யில் விளையாடி உள்ளார். தவிர, 6 சர்வதேச 'டி-20', ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்ற சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சகாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய பிரப்சிம்ரன் சிங் (பஞ்சாப்), அனுஜ் ரவாத் (பெங்களூரு), ஆயுஷ் படோனி (லக்னோ), ராமன்தீப் சிங் (கோல்கட்டா), நேஹல் வதேரா (மும்பை), வைபவ் அரோரா (கோல்கட்டா), தமிழகத்தின் சாய் கிஷோர் (குஜராத்) உள்ளிட்டோரும் தேர்வாகினர்.

இந்தியா 'ஏ' அணி: திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ரவாத் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, ராமன்தீப் சிங், நேஹல் வதேரா, ஆயுஷ் படோனி, சாய் கிஷோர், ஹிருத்திக் ஷோகீன், ராகுல் சகார், வைபவ் அரோரா, அன்ஷுல் கம்போஜ், ரசிக் சலாம், ஆகிப் கான்.

Advertisement