நிறைமாத கர்ப்பிணியை பரிசலில் அழைத்து சென்ற அரசு செவிலியர்


நிறைமாத கர்ப்பிணியை பரிசலில் அழைத்து சென்ற அரசு செவிலியர்


புன்செய் புளியம்பட்டி, அக். 15-
சத்தி புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஓடும் மாயாற்றின் கரையில், நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹடா பஞ்., புதுக்காடு கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் மனைவி சினேகா, 23; நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று காலை, 6:௦௦ மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், பவானிசாகரில் உள்ள, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அடர்ந்த வனப் பகுதியில் உள்ள கிராமத்துக்கு மாயாற்றை பரிசலில் கடந்து தான் செல்ல வேண்டும்.
தகவலறிந்து தெங்குமரஹடா அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விமலா, 29; சினேகா வீட்டுக்கு சென்றார். கல்லாம்பாளையம் பகுதியில் ஓடும் மாயாற்றை கடக்க, பரிசலில் ஏற்றி அவருடன் கடந்து வந்தார். அதேசயம் தகவலின்படி மறுகரையில் காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள், சினேகாவை சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கர்ப்பிணியை பாதுகாப்பாக அழைத்து வந்த செவிலியர் விமலா, ஆம்புலன்ஸ் பணியாளர் விநாயகமூர்த்தி, ஓட்டுனர் உமாசங்கருக்கு வன கிராம மக்கள் நன்றி
தெரிவித்தனர்.

Advertisement