சென்னையில் மழைநீர் தேங்கிய சாலைகள்; போலீசார் வெளியிட்ட பட்டியல்

1

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


கன மழையினால், ஓ.எம்.ஆர். சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் பஸ்கள், எஸ்ஆர்பி, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக, சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓஎம்ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.

மேட்லி சுரங்கப்பாதை (தெற்கு) -கண்ணம்மாபேட்டை- முத்துரங்கன் சாலை- 17 அடி சாலை -அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

பெரம்பூர் சுரங்கப்பாதை (வடக்கு) - முரசொலிமாறன் பாலம்

சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் (தெற்கு) -வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் இருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லுாரிக்கு திருப்பி விடப்படும்.

பெரியார் பாதையிலிருந்து நெற்குன்றம் பாதை (தெற்கு) வடபழனி- வடபழனியில் வரும் வாகனம் திருப்பி விடப்படாது.
வெளியே செல்லும் வாகனம் கோயம்பேட்டில் திருப்பி விடப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள் மூடல்:



சென்னையில் பெய்த மழையால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில், சுங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால், சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இதன்படி, வடமேற்கு பகுதிகளில் உள்ள

* பெரம்பூர் ரயில்வே சுரகப்பாதை

*வில்லிவாக்கம்

*சூரப்பட்டு


தென் கிழக்கு பகுதிகளில் உள்ள

* ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

* மேட்லி சுரங்கப்பாதை

*கெங்கு ரெட்டி

ஆகிய 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல சென்னையில் வட மேற்கு பகுதிகளில் உள்ள சாலைகளான பிராட்வே சந்திப்பு, புளுஸ்டார், ஐயப்பன் கோயில், இளையபெருமாள் சாலை, மாதவரம் ரவுண்டானா, எம்எம்டிஏ, பில்ரோத் மருத்துவமனை, அண்ணாநகர் 6வது அவென்யூ, கே10 சந்தை, காளியம்மன் வீதி, மூகாம்பிகை, ராஜமங்கலம்,எஸ்.எஸ்.ராயல் மால், 13 வது பிரதான சாலை, திருமங்கலம் 2வது அவென்யூ, சந்தை ஜங்ஷன் வானகரம், ஓடாமா சந்திப்பு, புளியந்தோப்பு ஏசி சாலை, ஸ்டீபன் சாலை, கணேசபுரம், ஸ்டீபன்ஸ் லேன், சிட்கோ நகர், திருவள்ளூர் சாலை, என்எஸ்சி பாஸ் சாலை, கண்ணன் சாலை,டிஹச் சாலை அஞ்சல் அலுவலகம், கைலாசம் தெரு, விஎன் பாலம், ஏஇ கோயில், ராசாக் கார்டன், போகன் வில்லா, மேட்டுக்குளம், செட்டியார் அகரம் சர்வீஸ் ரோடு, பிபிசாலை, 70 அடி சாலை,நெற்குன்றம் ஆகிய 37 சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் போக்குவரத்து மெதுவாக இயக்கப்படுகிறது.

சென்னையின் தென்கிழக்கு பகுதிகளான, தாண தெரு, ஈ.வே.ரா சாலை எவரெஸ்ட் கட்டிடம், குருசாமி பாலத்தின் கீழ், பி.எஸ்.சிவசாமி சாலை, உடுப்பி முனை, வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு, சுதந்திரதின பூங்கா முதல் நாகாஸ், டேங்க் பங்க் ரோடு, ஸ்டெர்மிங் சாலை, பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, தாஜ் வெலிங்டன் ஓஎம்ஆர், நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை பிஎஸ், அண்ணாசாலை முதல் எம்.ஜி.ஆர் சாலை, மெட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம், பட்டுலாஸ் சாலை, அழகப்பா சாலை, ஈ.வே.ரா சாலை, அழகப்பாசாலை, ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பா சாலையை நோக்கிய நாயர் முனை மூடப்பட்டது.

ரிதர்டன் சாலை, காந்தி இர்வின் நோக்கி ஈ.வி.ஆர். சாலை, பி.எல்.சி., ஈவிஆர் சாலை, குருசாமி பாலம் வாய், மில்லர்ஸ் சாலை, கொன்னுார் உயர் சாலை, ஷை லாம் தெரு, மெஷாயிப் சந்தையை நோக்கி ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, நடேசன் சாலை, படகு கிளப் சாலை, ஏஎம்பி
அவென்யூ, ராம்கோ சந்திப்பு, குழந்தைகள் பூங்கா, அண்ணா பல்கலைகழகம், பல்லவன் சாலை, அண்ணாசாலை, பாந்தியன் சாலை, ராஜரத்தினம் ஸ்டேடியம், அசோகா ஹோட்டல், பனகல் பூங்கா, வாணி மஹால், நாயர் சாலை, காளியம்மன் கோயில் ரெட்டி தெரு, 80 அடி சாலை, சிவன் பூங்கா, ஆர்டிஓ பாயிண்ட், ஐந்து பர்லாங் சாலை, எஸ்ஆர்பி டூல்ஸ், எம்ஜிஆர் சாலை, கால்வாய் பாலம், துரைப்பாக்கம் முதல் வெட்டுவாங்கனி சாலை, கந்தஞ்சாவடி, அப்பல்லோ, ராணுவசாலை ஆகிய 58 சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மெதுவாக செல்கிறது.

இந்த சாலைகளை தவிர்த்து மாற்றுப்பாதைகளில் பாதுகாப்பாக செல்ல மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement